வியாழன், 2 செப்டம்பர், 2010

அப்பிள் நிறுவனத்தின் நவீன 'ஐ பொட் டச்' - 'ஐ பொட் நெநோ'

அப்பிள் நிறுவனமானது தனது இசைப்பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் இசையை பிரதானப்படுத்திய சமூகவலை அமைப்பு பிங் , நவீன 'ஐ பொட் டச்' மற்றும் 'ஐ பொட் நெநோ' என்பவற்றை நேற்று அறிமுகப்படுத்தியது.
ஐ பொட் டச்
இப்புதிய 'ஐபொட் டச்'சானது மிகவும் மெல்லிய உருவத்தினை கொண்டது. இதன் திரை 'அப்பிள் ஐ' இன் நான்கில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'ரெடீனா ஸ்க்ரீன்' தொழில்நுட்பத்தினை ஒத்ததாகும்.



மேலும் இது இரண்டு கெமராக்களை கொண்டுள்ளதுடன் ஒரு தடவை இதனை சார்ஜ் செய்வதன் மூலம் 40 மணித்தியாலங்கள் வரை பாடல்களைக் கேட்கவும் 7 மணித்தியாலங்கள் வரை வீடியோக்களைப் பார்க்கவும் முடியும்.
மேலும் வீடியோ பதிவு செய்யும் வசதி, 'வொயிஸ்மெமோ', 'மெப்ஸ்' , 'வொயிஸ் கொண்ட்ரோல்', 'யு டியுப்' , 'நைக் + ஐ பொட்', 'சபாரி வெப்பிரவுசர்' , மெயில் ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது
ஐ பொட் நெநோ
மேற்படி 'ஐ பொட் நெநோ' ஆனது தனது முன்னைய 'ஐ பொட் நெநோ'வுடன் ஒப்பிடும் போது மிகச் சிறியதாகும். மேலும் அதன் பாரமும் மிகக் குறைவானது. தொடுந்திரையுடன் அமைக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம். 'வொயிஸோவர்', 'எப் எம் ரேடியோ' , 'நையிக் + மற்றும் 29 மொழிகளில் என்பன இதன் மேலதிக வசதிகளாகும்.



மேலும் 8 ஜிபி நினைவகத்தினைக் கொண்ட 'நெநோ 149' அமெரிக்க டொலர் விலையிலும் 16 ஜிபி 179 அமெரிக்க டொலர் எனவும் விலையிடப்பட்டுள்ளன.
'ஐ டியூன் பிங்'
மேற்படி சமூக வலைப்பின்னல் தளமானது அப்பிளின் பிரபல இசை மென்பொருளான 'ஐ டியூனு'டன் சேர்ந்ததாகும்.
இது இசைப் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் தளம்.
இதன் மூலம் பாவனையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான இசைக்கலைஞர்களைப் பின்பற்ற முடியும். மேலும் அவர்கள் கொள்வனவு செய்யும் இசை வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
மேலும் அக்கலைஞரின் இசை வெளியீடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எமது நண்பர்களுக்குப் பிடித்தமான இசை தொடர்பான தகவல்களினை இதனூடாகப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் அவர்கள் தெரிவு செய்த பாடல்களையும் செவிமடுக்க முடியும்.
'ஐ போன்' மற்றும் 'ஐ பொட் டச்' என்பவற்றினூடக இச்சேவையைப் பெற முடிகின்றமை இதன் சிறப்பம்சம்

.

1 comments:

அஸ்பர்-இ-சீக் சொன்னது…

very cool products from Apple.. unfortunately i don't have money to buy

கருத்துரையிடுக