ஞாயிறு, 12 டிசம்பர், 2010

3ஆண்பி அனாள்ளைகளையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டுதையாய் போன தாயின் குரல் இது.

http://tamilnews24.com/nesakkaram/ta/?p=342
இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே.
இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான கல்வியைக் கோருகிறார். தானில்லாது போனால் தனது மகளை காப்பாற்றுங்கள் எனக்கெஞ்சுகிறாள். இந்தத்தாய் போல் பல்லாயிரம் தாய்கள் தங்கள் காணாமற்போன பிள்ளைகளையும் களங்களில் மடிந்த பிள்ளைகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
தனது பிள்ளைகள் திரிந்த தெருக்களில் வாழ்வதில் ஒரு திருப்தியைப் பெற்றுக் கொள்கிற இந்த அம்மாவுக்கு ஒரு கரம் கொடுத்துத் தூக்கிவிடுவோம். இந்த அம்மாவின் பிள்ளைகளுக்கு நிகராக எம்மால் எதுவும் முடியாது ஆயினும் எங்களால் இயன்ற உதவியைக் கொடுத்து உயர்த்திவிடுவோமா உறவுகளே…?


0 comments:

கருத்துரையிடுக