வெள்ளி, 10 டிசம்பர், 2010

செந்தமிழன் சீமான்

சீமானை வரவேற்கும் நாம் தமிழர் கட்சியினர் (படங்கள்)
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் 1.30க்கு சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.





 தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நாம் தமிழர் கட்சியினர்  சீமானை பட்டாசு கொளுத்தி உற்சாகமாய் வரவேற்றனர்.   மேலும் கொளத்தூர் மணி, இயக்குநர் பாலா, இயக்குநர் வ.கவுதமன் உட்பட பலரும் அவரை வரவேற்றனர்.

செந்தமிழன் சீமான் வேலூரில் இருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்.

செந்தமிழன் சீமான் அவர்கள் வேலூர் சிறைச்சாலைக்குள் இருந்து வெளிவந்த பின் அவரை வரவேற்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு எழுச்சியுரையாற்றினர். பின் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். செந்தமிழன் சீமான் அவர்களின் வாகனத்திற்கு முன்பும் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான வாகனத்தில் நாம் தமிழர் செயல்வீரர்கள் எழுட்சி முழக்கம் இட்டபடியே பின்தொடர்கின்றனர். சீமான் அவர்கள் சென்னை வந்தடைந்தவுடன் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் ஈடு பட உள்ளார் .எம்.ஜி.ஆர். சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை

 

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் 1.30க்கு சிறையில் இருந்து விடுதலை பெற்றார்
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நாம் தமிழர் கட்சியினர்  சீமானை உற்சாகமாய் வரவேற்றனர்.   மேலும் கொளத்தூர் மணி, இயக்குநர் பாலா, இயக்குநர் வ.கவுதமன் உட்பட பலரும் அவரை வரவேற்றனர்.

பின்னர் சீமான், சிறை வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆர்.  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அருகே இருந்த பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

[ஒலிப்பதிவு இணைப்பு] சிறையை விட்டு சீறி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன்

சிறையை விட்டு சீறி வெளியே வந்த சீமான் வழியேங்கும் மக்கள் இடையே எழுச்சி உரை ஆற்றிய படியே சென்னை நோக்கி நகர்கிறார். அவரை பின் தொடர்ந்தே கட்சியின் செயல்வீரர்களும் எழுச்சி முழக்கம் இட்டபடியே பின் நகர்கின்றனர். இவ் பிரமாண்ட ஊர்வலம் சென்னை தலைமை அலுவலகத்தை இரவு 8.00மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்க படுகிறது. சிறையை விட்டு சீரி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன் நாம் தமிழர் இணையதளத்திற்கு அளித்த செவ்வி

0 comments:

கருத்துரையிடுக