செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!
அதிகாலைவேளை சு.ப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்கள் அந்த அலுவலகத்தில் தான் இருக்கிறார் என்பது யாருக்குத் தெரியும் ? கிபீர் விமானம் தாக்குதலுக்கு வந்தால் அவர் நிச்சயம் அந்த மாமரத்துக்கு கீழ் உள்ள பங்கருக்குத்தான் செல்வார் என்று எவர் எவருக்குத் தெரியும் ? நேரடியாக தரையில் இருந்தவாறு அவர் வாகனத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து சிங்கள காடையருக்கு செய்தி சொன்னதும் ஒரு தமிழ் மூதாட்டி என்றால் நம்பமுடியுமா உங்களால் ? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும் ! சுப.தமிழச்செல்வன் அவர்களின் வீடு கிளிநொச்சி 55ம் கட்டையில் உள்ளது. அவர் வீட்டில் இருந்து 3வது வீடு ஒன்றில் அவர் தனது அலுவலகதை வைத்திருந்தார். அந்த வீட்டிற்கு முன் வீட்டில் 48 வயது நிரம்பிய ஆச்சி ஒருவர் வசித்துவந்தார். அவரிடம் தென்னிலங்கையில் இருந்து தெயிலை வியாபாரிகள் வந்துசெல்வது வழக்கம்.
தெயிலை வியாபாரி வேடத்தில் வந்த அவர்கள், அந்த ஆச்சிக்கு பணத்தாசையைக் காட்டி மயக்கியுள்ளனர். CDMA போன் ஒன்றையும் கொடுத்து சுப.தமிழச்செல்வனின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் சொல்லியுள்ளனர். கிபீர் விமானங்கள் தாக்குதலுக்கு வந்தால் அவர் என்ன செய்வார் என்பதைக்கூட அந்த ஆச்சி, துல்லியமாக தென்னிலங்கை தேயிலை வியாபாரிக்குச் சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில் தாக்குதல் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. கிபீர் போட்டுச் சென்ற குண்டுகள் முதலில் பதுங்கு குழிகளுக்கு மேல் உள்ள மண் மூடைகளைத் தகர்தது, அதில் இருந்து முன் நோக்கிப் புறப்பட்ட இரண்டாவது குண்டு கொங்கிரீட்டை ஊடறுத்து உள்ளே போய் வெடித்துச் சிதறியது. என்றும் நித்திய புன்னகையோடு இருக்கும் தமிழ்ச்செல்வன் வீரச்சாவை தழுவிக்கொள்கிறார். அவரோடு எப்போதும் அருகில் இருக்கும் லெப்-கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் செல்வம் கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன், ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்கின்றனர். சமாதானச் செயலகத்திற்கு இத் தகவல் பரிமாறப்படுகிறது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் சித்தார்த்தன் மட்டுமே உயிரோடு இருக்கிறார். அப்போது அங்கே ஈழப்பிரியன், ரேகா உட்பட பல போராளிகள் விரைந்துசெல்கின்றனர். எப்படியாவது குழியைத் தோண்டி
சுப . தமிழ்ச்செல்வனை உயிரோடு வெளியே எடுக்கலாம் என நம்பி தோண்ட ஆரம்பிக்கின்றனர். ஆனால் மிஞ்சியது வேதனை மட்டும்தான். அவர் வீரச்சாவடைந்த செய்தி உலகில் வாழும் அனைத்துத் தமிழர்கள் நெஞ்சையும் சொல்லெண்ணா துயரில் ஆழ்த்தியது மட்டுமல்லாது, பல உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இச் செய்தியை அறிந்த நான் உடனே ஒரு சமாதானச் செயலாளரை இலங்கை அரசு அநியாயமாக கொன்றுவிட்டது என்பதை ஆதாரபூர்வமாக, புகைப்படங்களையும் இணைந்து ஜ.நா மனித உரிமை ஆணையகத்துக்கு அனுப்புகிறேன். அதே நேரம் அன்று மாலை அஞ்சலி நிகழ்வு ஒன்றும் நடைபெற இருப்பதாக அப்போது நான் அறிந்தேன். தமிழ் கவியரசு என்று சொல்லுவார்கள், தமிழில் பற்று உள்ளவர் என்று சொல்லுவர்கள், அத்தோடுமட்டுமல்ல தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் என பல மேடைகளில் பேசிவந்த, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை தொடர்புகொண்டு சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு இரங்கல் கவிதை எழுதித் தரும்படி கோரினேன், அவர் அங்கு இருக்கவில்லை. அவரின் செயலாளர் வைரமுத்து பங்களாவுக்குச் சென்று பாட்டு எழுதுவதில் படு பிசியாக இருப்பதாக என்னிடம் கூறினார். அவர் கவனம் முழுக்க முழுக்க சு.ப தமிழ்ச்செல்வன் மரணம் குறித்த கேள்விகளாகவே இருந்தத
. சற்று நேரத்தில் தமிழ் நாட்டில் இருந்து தினகரன், தினமணி, உட்பட பல முன்னணிப் பத்திரைகைகளில் இருந்து எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகள் வரத்தொடங்கியது. தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டாராமே !
உண்மையா உறுதியாகக் கூறமுடியுமா ? என்று கேட்டு நச்சரித்தார்கள் அவர்கள். யாரிடம் இருந்து எனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள் என நான் வினவ, வைரமுத்துவின் பி.ஏ( செயலாளர்) தான் தந்ததாகக் கூறிய அவர்கள் சூடான செய்திகளைத் தந்தால் பணம் தருவதாக எனக்கே கூறினார்கள் என்றால் பாருங்களேன். இங்கே ஒரு இனம் தமது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு 33,000 போராளிகளை விலைகொடுத்துப் போராடிக்கொண்டு இருக்கிறது, தன்னிகரில்லா அரசியல் தலைவரான சு.ப தமிழ்ச்செல்வனை இழந்து தவிக்கிறது, ஆனால் அங்கோ சூடான செய்திகளைத் தேடி, சாவையும் பணமாக மாற்ற ஒரு கும்பல் அலைந்து திரிகிறது. அதிலும் வைரமுத்துவின் பிரத்தியேகச் செயலாளர், பணம் சம்பாதித்த விததைப்பார்த்தால் பெற்ற தாயை விற்றுப்பிழைப்பதைவிடக் கேவலமானது. பல நாட்கள் ஆகியும் கவிஞர் வைரமுத்து தொடர்புகொள்ளவில்லை. நாட்கள் உருண்டோடி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. குறிப்பாக சமாதான காலத்தில் பல வெளிநாட்டவர்கள் வன்னிசென்று தமிழ்ச்செல்வன் அவர்களை பார்த்திருப்பார்கள்.
அவர்களில் பலரை தழிச்செல்வன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பேசியுள்ளார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அவர் தனக்குத் தெரிந்த அநெகமானோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தாம் இறக்கப் போகிறோம் என்று முன்னரே அவருக்குத் தெரிந்துதான் எல்லோரிடமும் அவர் பேசியிருக்கிறார் என பல நண்பர்கள் எனக்குச் சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன். எது எவ்வாறு இருப்பினும் தமிழீழப் போராட்ட வரலாறில் சமாதன காலப் பகுதியில், பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து தமிழர்களின் பிரச்சனையை உலகறியச்செய்தவர் தமிழ்ச்செல்வன் அவர்கள்.
அவர் போராட்ட வலராற்றில் என்றும் ஒரு மைல் கல்லாகவே அமைந்து சரித்திரம் படைத்துள்ளார் என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன் .
சச்சின் 50 டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை
செஞ்சூரியன் : பாகிஸ்தானுக்கு 1989ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சென்ற இந்திய அணியில் 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் இடம் பெற்றிருந்தான். அவனுடைய திறமை பாராட்டி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்திருந்தாலும் யாருக்கும் அதில் நம்பிக்கை இல்லை. ஆனால், சில போட்டிகளுக்கு பின் அந்த சிறுவனை கிரிக்கெட் உலகம் கொண்டாட தொடங்கியது. 21 ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்த சிறுவனுக்கு இப்போது 38 வயதாகி விட்டாலும் அவரது கிரிக்கெட் தாகம், ஆர்வம், திறமை சிறிதும் குறையவில்லை; மங்கவில்லை. அவர்தான் சச்சின் டெண்டுல்கர் என்ற சொல்ல தேவையில்லை.
டெஸ்ட், ஒருநாள் என 2 பிரிவு போட்டிகளிலும் பல சாதனைகளை செய்துள்ள சச்சின், இனி யாருமே நெருங்க முடியாத அளவுக்கு புதிய சாதனையை நேற்று படைத்தார். செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று தனது 50வது சதத்தை அடித்து புதிய உலக சாதனையை அவர் படைத்தார். கடந்த 4 டெஸ்டுகளாக இந்த சாதனையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் ஆசை நேற்று நிறைவேறியது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் நேற்று 14,500 ரன்னை கடந்து மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் என 2 பிரிவு போட்டிகளிலும் பல சாதனைகளை செய்துள்ள சச்சின், இனி யாருமே நெருங்க முடியாத அளவுக்கு புதிய சாதனையை நேற்று படைத்தார். செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று தனது 50வது சதத்தை அடித்து புதிய உலக சாதனையை அவர் படைத்தார். கடந்த 4 டெஸ்டுகளாக இந்த சாதனையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் ஆசை நேற்று நிறைவேறியது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் நேற்று 14,500 ரன்னை கடந்து மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.


0 comments:
கருத்துரையிடுக