ஞாயிறு, 2 ஜனவரி, 2011

ஒரு பிள்ளையின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள் +கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி, நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி வெற்றி.


ஒரு பிள்ளையின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்
எனவே எம் அன்பிற்குரிய உறவுகளே !

எங்களின் எதிர்கால சந்ததியாகிய மாணவர்களின் எதிர்காலத்திற்காய் அனைவரும் கரங்கொடுப்போம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிள்ளையை எமது அமைப்பிடம் இருந்து பொறுப்பெடுத்து இடைத்தரகரின்றி நேரடியாகவே அந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கல்விக்காக மாதம் £30 குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் நேரடியாகவே வழங்கி அழிந்துபோய் மீண்டு எழுவதற்காகத் துடிக்கின்ற எமது சந்ததிக்கு உடனடியாகக் கரம் கொடுங்கள். நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களே பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து உங்களுக்கு வழங்குகின்றனர்
புலம் பெயர் நாடுகளிலுள்ள நல்ல உள்ளம் கொண்ட பலர் தாமாக முன்வந்து எம்மிடம் இருக்கும் விபரங்களைப் பெற்று நேரடியாக அங்குள்ள பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு தாங்களே நேரடியாக உதவி செய்து வருகின்றனர். இங்கு எந்த இடைத்தரகர்களும் இல்லையென்பதால் நீங்களே பிள்ளைகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.


இதனால் நம்பிக்கையும் அனுப்பப்படுகின்ற உதவி சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமையும் பேணப்படும். எம்மிடம் தொடர்பு கொள்வதன் மூலம் உடனடியாகவே ஒரு பிள்ளையின் விபரத்தைப்பெற்று அவர்களுக்கு நீங்கள் நேரடியாகவே உதவி செய்ய முடியும்.


" விரைந்து கரங்கோடுப்போம் எதிர்கால வாழ்விற்கு வழி காட்டுவோம் " நன்றி.


l தொடர்புகளுக்கு : இணையதள முகவரி : www.itsonetwork.org மின்னஞ்சல் முகவரி : itsonetwork@gmail.com தொலைபேசி இலக்கங்கள , 00447921227920               00447921227920           


ps click here -read more and see photo in

கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி
நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள் அனைத்தும் இரவு 10 மணிவரை மட்டுமே இயங்கி வந்தது.இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த 27.12.2010 மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆனந்தராசு அவர்கள் தலைமையில் உணவகங்களை இரவு12 மணிவரைக்கும் திறக்க அனுமத்திக்கவேண்டும் என மனு கொடுத்தனர் இதனையடுத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இனி உணவகங்கள் இரவு 12 மணிவரைக்கும் இயங்கலாம் என தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சனையை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியினரை கோவை நகர மக்கள் பெரிதும் பாராட்டினர்





0 comments:

கருத்துரையிடுக